அம்பேத்கர் சிலை அமைத்து தரவும், கனிமொழியை பேச வலியுறுத்தி வாகனத்தை மறித்து போராட்டம்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கோவில்பட்டி பகுதியில் 2வது நாளாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்
நேற்று இரவு லிங்கம்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் தனது பிரச்சார வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார்.அப்போது கோவில்பட்டி தாமஸ் நகரில் அம்பேத்கர் சிலை அமைத்து தர வேண்டும், தங்கள் பகுதியில் கனிமொழி தேர்தல் பிரச்சார மேற்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்தவர்கள் கனிமொழி தேர்தல் பிரச்சார வாகனத்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றதால் போலீசார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து கனிமொழி தேர்தல் பிரச்சார வாகனத்தில் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன் பேசினார்.அப்போது கனிமொழி பேசுகையில் உங்களின் கோரிக்கைகள் குறித்து தனக்குத் தெரியும். தற்போது தேர்தல் என்பது எவ்வித வாக்குறுதியும் கொடுக்க முடியாது. தேர்தல் முடிவு களை கண்டிப்பாக நான் வந்து சந்திப்பேன். நான் பேச வேண்டும் என்பதற்கான தங்கள் ஆவலைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.கனிமொழி பேசியதும் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது
Tags : அம்பேத்கர் சிலை அமைத்து தரவும், கனிமொழியை பேச வலியுறுத்தி வாகனத்தை மறித்து போராட்டம்