தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கில் இன்று தீர்ப்பு

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி அப்பாவி பெண்களை மிரட்டி வீடியோ எடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 9 பேர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது .சிபிசிஐடி வசம் இருந்து 2021 ஆம் ஆண்டு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட இவ் வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஒன்பது பேர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், 10:30 மணி அளவில் நீதிபதி நந்தினி தேவியால் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இப்பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags :