பள்ளி கழிவறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி

by Staff / 21-09-2022 02:30:21pm
பள்ளி கழிவறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி

தூத்துக்குடி: பசுவந்தனை சில்லாங் குளத்தில் செயல்பட்டு வரும் மேல்நிலைப் பள்ளி கழிவறையில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார், உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தங்களுக்கு தெளிவான தகவல் அளிக்கப்படவில்லை என மாணவியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் வடு இன்னும் ஆறாத நிலையில் தற்போது நடந்துள்ள இந்த சம்வம் தமிழகத்தை மீண்டும் உலுக்கியுள்ளது.

 

Tags :

Share via

More stories