ரீல்ஸ் மோகம், லைக்குகளை பெற ரயில் தண்டவாளத்தில் கல்வைத்த வடமாநில நபர்கள் 2 பேர் கைது.
செங்கோட்டை-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த வாரம் 25 9 2024 ஆம் தேதி மாலையில் சங்கரன்கோவில் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. கடையநல்லூர் பாம்பு கோயில் சந்தைக்கும் இடையே வரும் போது சங்கனா பேரியிலிருந்து சுந்தரேஸ்வரர் புரம் செல்லும் பாதையில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில் இரண்டு தண்டவாளத்திற்கு இடையே பெரிய கல் ஒன்று இருந்தது. இதில் மோதிய பொதிகை ரயில் கொஞ்ச தூரம் சென்று நின்றது . அதிர்ஷ்டவசமாக கல் நொறுங்கிய நிலையில் ரயிலுக்கு எந்த சேதமும் இல்லை.. இந்த சூழ்நிலையில் ரயில் இன்ஜின் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே இருப்பு பாதை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரயில்வே எஸ்.பி.ராஜன் தலைமையில் நெல்லை டி.எஸ்.பி.இளங்கோவன் ஆய்வாளர் செல்வி உள்ளிட்ட குழுவினர் தனிப்படையினர் சம்பவம் நடந்த ரயில்வே தண்டவாளத்திற்கு இடையே கல் வைத்த குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் அருகில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்த சத்தீஸ்கர்மாநிலத்தை சேர்ந்த புல்சிங் பாகேல்,பி.ஈஸ்வர் மீடியா ரயில்வே டிராக்கில் அமர்ந்து ரீல் செய்து கொண்டிருந்தனர்.. காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து ஓட முயற்சி செய்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் பொழுதுபோக்காக ரீல்ஸ் விளம்பரத்துக்காக லைக்குகளை பெற தண்டவாளத்தில் கல் வைத்தது தெரிய வந்தது இருவரையும் கைது செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே இருப்பு பாதை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
Tags : ரீல்ஸ் மோகம், லைக்குகளை பெற ரயில் தண்டவாளத்தில் கல்வைத்த வடமாநில நபர்கள் 2 பேர் கைது.