மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை செலுத்தினர்.

by Editor / 02-10-2024 01:02:47pm
 மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர்  மரியாதை செலுத்தினர்.

இன்று (அக்.2) தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாள். நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு மறக்க முடியாதது. காந்தி, அக்.2,1869 அன்று குஜராத்தில் உள்ள போர்பந்தரில் பிறந்தார். அவரது தந்தை பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் பெயர் புதாலி பாய். ஐ.நா சபையில் ஜூன் 15, 2007-ல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

 

Tags : மரியாதை செலுத்தினர்.

Share via