1 ஆண்டில் 300 மில்லியன் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

by Staff / 27-05-2024 04:18:12pm
1 ஆண்டில் 300 மில்லியன் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

12 மாதங்களில் உலகில் 8ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக பிரிட்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. ஓராண்டில் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலால் பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகளின் அனுமதியின்றி மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், AI மூலம் உருவாக்கப்பட்ட DEEP FAKE புகைப்படங்களை வைத்து அவர்களை துன்புறுத்தி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories