துப்பாக்கிச் சூடு.. காவலரின் துணிச்சல்

by Staff / 06-04-2023 05:09:00pm
துப்பாக்கிச் சூடு.. காவலரின் துணிச்சல்

இந்தியாவில் சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் காவல்துறை எப்போதும் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், கொலை வழக்கில் தொடர்புடையவரை பிடிக்க மப்டியில் சென்ற காவலரை நோக்கி குற்றவாளி சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்நிலையில், சாமர்த்தியமாக செயல்பட்ட காவலர் அச்சமின்றி துப்பாக்கி முனையில் சென்று குற்றவாளியை பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்தார். இந்த வீடியோவை டெல்லி போலீசார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அந்த காவலரின் துணிச்சலை பாராட்டினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
 

 

Tags :

Share via