மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி ஓடி வந்து உதவிய பாதுகாப்பு படையினர்

by Staff / 08-04-2022 11:07:36am
மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி ஓடி வந்து உதவிய பாதுகாப்பு படையினர்

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரசவித்த பெண் ஒருவருக்கு அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் உதவி செய்தனர். ஆனந்த் விஹார் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தர்.  குழந்தை பிறக்க சில வாரங்களில் இருந்த நிலையில் திடீரென அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த சி ஐ ஸ் ப் வீரர் உயரதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த பெண் காவலர் தலைமையிலான குழுவினர் உடனடியாக அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

 

Tags :

Share via

More stories