அடிதடி வழக்கில் தேடப்பட்ட வாலிபர் தற்கொலை

தூத்துக்குடி பூபாலராயா்புரத்தை சோ்ந்தவா் இருதயராஜ் (42). இவரது உறவினா்களான அதேபகுதியை சோ்ந்த ஜெயிஸ்டன்(25), அவரது சகோதரா்கள் டேவிட் பெக்காம் (23), எட்வின் (21) ஆகியோா் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, இருதயராஜ் வீட்டின் அருகே நின்று அவா்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டனராம். இதை இருதயராஜ் கண்டித்தாராம்.
இதனால் ஆத்திரம் அடைந்த சகோதரா்கள் 3 பேரும் சோ்ந்து இருதயராஜை தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த இருதயராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஜெயிஸ்டன், எட்வின் ஆகிய இருவரையும் கைது செய்தனா். டேவிட் பெக்காமை தேடிவந்தனா்.
இந்நிலையில் டேவிட் பெக்காம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, டேவிட் பெக்காம் சடலத்தை மீட்டு கூறாய்வுக்கு அனுப்பினா். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :