புதிய திட்டப் பணிகள்........... கனிமொழி எம்பி அடிக்கல்

by Staff / 05-03-2025 12:49:50pm
புதிய திட்டப் பணிகள்........... கனிமொழி எம்பி அடிக்கல்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 03 இடங்களில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ்; ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 44 இலட்சம் செலவில் முடிவுற்ற 02 திட்டப் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் முன்னிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்றையதினம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடுக்காம்பாறை ஊராட்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாய நலக்கூடக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் ஜஸ்வர்யா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via