லாரி மோதி விபத்து - 11 பேர் பலி

by Staff / 26-05-2024 12:05:57pm
லாரி மோதி விபத்து - 11 பேர் பலி

உத்திரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் நேற்று (மே 25) நள்ளிரவில் ஒரு பயங்கர விபத்து நடந்துள்ளது. தாபாவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர், 25 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பூர்ணங்கிரிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo