எம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ.3 கோடி
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தர்,
பொதுவாகவே மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒவ்வொரு எம்எல்ஏக்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நிதியைக் கொண்டு ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் தொகுதியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி நடப்பு ஆண்டில் ஒரு தொகுதிக்கு ரூ 3 கோடியாக மீண்டும் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
இதேபோல நாடாளுமன்ற எம்பிகளுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக சில ஆண்டுகள் இந்த தொகுதி மேம்பாட்டு நிதி எம்பிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :