திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

by Editor / 06-08-2025 05:12:26pm
திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

திருப்பூர் பிரின்ஸ் கார்டன் பகுதியை சேர்ந்த பிரீத்தி என்ற இளம்பெண்ணிற்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்வருடன் கடந்த 2024 செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நகை, பணம் மற்றும் ஆடம்பர கார் வழங்கப்பட்ட நிலையிலும், மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தாயார் வீட்டில் தங்கியிருந்த பிரீத்தி, மன உளைச்சலில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via