சாக்லெட் தயாரித்த ராகுல் காந்தி

by Staff / 28-08-2023 12:17:35pm
சாக்லெட் தயாரித்த ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி ஊட்டி சென்றிருந்தார். அங்கு புகழ்பெற்ற சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்று பார்வையிட்ட அவர், தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுடன் மகிழ்ச்சியோடும் அன்போடும் உரையாடினார். அவர்களிடம் ராகுல் காந்தி எப்படி சாக்லேட் தயாரிப்பது என்று கேட்டு அதன்படி சாக்லேட் தயார் செய்திருக்கிறார். சாக்லேட் தயார் செய்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சாக்லெட்களுக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி குறித்து அப்போது அவர் மத்திய பாஜக அரசை சாடினார்.

 

Tags :

Share via