தமிழ்நாட்டுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்

தமிழ்நாட்டில் நாளை ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே வேளையில் விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Tags :