வானதி சீனிவாசனை கண்டித்து மநீம கட்சியினர் ஆர்ப்பாட்டம்

by Staff / 16-07-2023 01:49:59pm
வானதி சீனிவாசனை கண்டித்து மநீம கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் மநீம கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வானதி சீனிவாசன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி கண்டன முழக்கங்களை எழுப்பி, உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத் துணைத் தலைவர் தங்கவேலு தலைமை தாங்க, மண்டல செயலாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் கவிஞர் சினேகன் கலந்துகொண்டு கண்டனவுரையாற்றினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

 

Tags :

Share via

More stories

Logo