தமிழக வெற்றி கழகத்தின் நாளை சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது..
தமிழக வெற்றி கழகத்தலைவர் விஜயின் தலைமையில் சுங்குவார்சத்திரம் ஜேப்பிஆா் பொறியியல் கல்லூரி வளாக அரங்கில் நாளை சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.. கூட்டத்தில் சுமார் 2000 பேர் மட்டுமே பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.. இக்கூட்டம் ,கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொது நிகழ்ச்சியாகும். .இதற்கு முன்பு அவர் கரூரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை அழைத்து தம் தலைமை அலுவலகத்தில் வைத்து சந்தித்த பின்னர் இந்த பொது நிகழ்வு நடைபெற உள்ளது.. சேலத்தில் ,டிசம்பர் 4ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அனுமதி கோரி இருந்த நிலையில், திருவண்ணாமலை தீபத் திருவிழா, பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகிய காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதன் பின்பு அரங்கத்திற்குள் நிகழ்வு பொதுக்கூட்டமாகும்.. இச் சிறப்புப் பொதுக்கூட்டத்தின் காரணமாக தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் நகர்வை முன்னெடுத்துள்ளது..
Tags :


















