பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த கூடாது

by Editor / 20-08-2022 02:22:18pm
பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த கூடாது

பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த கூடாது என தொடக்கக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.மழைக்காலம் வருவதால்  கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் விதமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளாகங்களை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மை பணியில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு பதிலாக உரிய அதிகாரியின் அனுமதி பெற்று 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கொண்டு தூய்மைப் பணியை மேற்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories