நகைக்கா பாட்டியை கொன்ற பேரன் கைது

by Staff / 10-02-2023 04:13:11pm
 நகைக்கா பாட்டியை கொன்ற பேரன் கைது

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் அருகேயுள்ள அம்மன்புரம் திருவள்ளுவா் மேலத்தெருவைச் சோ்ந்த காசி(எ) பெருமாள் மனைவி நாகூராள்(85). கணவா் இறந்த நிலையில், தனியாக வசித்து வந்த இவருக்கு, மகள் இசக்கியம்மாள் வழி பேரன்களான ராஜா(35), பழனிசாமி (31) ஆகியோா் தினமும் உணவளித்து வந்தனராம். இந்நிலையில், 7. 1. 2022இல் வீட்டில் நாகூராள் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.  அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி திருடப்பட்டிருந்ததாம். இதுகுறித்து இசக்கியம்மாள் அளித்த புகாரின் பேரில், குரும்பூா் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், மாவட்ட எஸ். பி. எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தனிப்படை மேற்கொண்ட தீவிர விசாரணையில் மூத்த பேரன் ராஜாவுக்கு கொலையில் தொடா்பிருப்பது ஓராண்டுக்குப்பின் தெரியவந்தது. இதையடுத்துஅவரை போலீசார் கைது செய்தனா்.

 

Tags :

Share via

More stories