தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு 2000 போலீசார் பாதுகாப்பு.டாஸ்மாக் கடைகள் அடைப்பு.
தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர், பசுபதி பாண்டியன். பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழர் அரசு போன்ற கட்சிகளில் முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், தேவேந்திர குல வேளாளர் இளைஞர் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கி அதன் நிறுவனத் தலைவராக இருந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் வசித்து வந்த பசுபதி பாண்டியன், பழிக்குப் பழியாக, கடந்த 10.01.2012 அன்று படுகொலை செய்யப்பட்டார்.இன்று பசுபதி பாண்டியனின் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 10 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு காவல் உதவி கண்காணிப்பாளர், 20 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 60 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tags :