இரு பொழுதுபோக்கு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து

by Staff / 30-05-2022 12:16:39pm
இரு பொழுதுபோக்கு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இரு பொழுதுபோக்கு படகுகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். வார இறுதி நாளையொட்டி வில்மிங்டன் நதியில் பொதுமக்கள் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.அப்போது எதிர்பாரத  விதமாக இரு படகுகள் நேருக்கு நேர் மோதி நதியில் கவிழ்ந்தது. நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர் 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல்படை நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via