ஆ.ராசா செலவு கணக்கை குறைத்துக் காட்டும்படி மிரட்டல்

by Staff / 12-04-2024 02:32:38pm
ஆ.ராசா செலவு கணக்கை குறைத்துக் காட்டும்படி மிரட்டல்

மக்களவை தொகுதி நீலகிரி திமுக வேட்பாளர் ஆ. ராசாவின் தேர்தல் செலவினங்களை குறைத்து காட்ட மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அருணா தன்னை மிரட்டுவதாக தேர்தல் செலவின உதவி கணக்கீட்டு அலுவலர் சரவணன் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தார். அதில், ஆ.ராசா தாக்கல் செய்த செலவில் பல லட்சங்கள் வித்தியாசம் உள்ள நிலையில் அதை குறைத்து காட்ட அருணா வலியுறுத்துவதாக தெரிவித்தார். இதற்கு விளக்கமளித்த ஆட்சியர், தேர்தல் விதிமுறைப்படி செயல்படுகிறோம். மிரட்டியதாக கூறுவது பொய்” என்றார்

 

Tags :

Share via

More stories