செங்கோட்டை - கொல்லம் பயணிகள் ரயிலில் பயணித்த பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட ரயில்வே நிர்வாகம்

by Editor / 16-12-2021 07:54:14am
செங்கோட்டை - கொல்லம் பயணிகள் ரயிலில் பயணித்த பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட ரயில்வே நிர்வாகம்

நாட்டில் கொரோனா ஊரடங்கையொட்டி அனைத்து ரயில்களையும் நிறுத்தியபோது, செங்கோட்டை - கொல்லம் இடையிலான எபயணிகள்  ரயிலும் 2020 மார்ச் 23ஆம் த்தேதியுடன்  நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா கட்டுபாடு விதிகளைப் பின்பற்றி எக்ஸ்பிரஸ் ரயில்கள் சிறப்பு ரயில்கள் என்ற அடிப்படையில் இயக்கினாலும், பயணிகள் ரயில்கள் ஓடவில்லை. செங்கோட்டை- கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து செங்கோட்டை - கொல்லம்  இடையே முன்பதிவு இல்லாத தினசரி விரைவு ரயில் சேவை தொடங்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இதனால் இருமார்க்கத்திலும் முன்பதிவு இல்லாத தினசரி விரைவு ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் 15 ம் தேதி செங்கோட்டையில் இருந்து  காலை 11.35 மணிக்கு புறப்பட்டு  மதியம் 2.20க்கு பகவதிபுரம், நியூ ஆரியங்காவு, தென்மலை, புனலூர்,கொட்டாரக்கரை, வழியாக கொல்லம் சென்றடையும்.முதல் நாளிலேயே ஏராளமான பயணிகள் பயணத்தை தொடங்கினர். இந்த ரயிலில் 200 மேற்பட்டவர்கள் மதுரையிலிருந்து ஆரியங்காவுக்கு பயணச்சீட்டு எடுத்திருந்த நிலையில் அவர்களை எந்த அடிப்படைவசதியுமில்லாத நியூ ஆரியங்காவு ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டதால் சில தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.இந்த நிலையில் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து இன்று போராட்டம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via