அரசு அதிகாரிகள் குடியிருப்புக்களில் சந்தமரம் வெட்டி கடத்திய 7பேர் கைது.

தருமபுரி சார் ஆட்சியர் பங்களா, காவல் துறை ஆயுதப்படை மைதானம் உள்ளிட்ட இடங்களில் இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியை சேர்ந்த விஷ்ணு, உமாபதி, ராமேஸ்வரன், காளியப்பன் மற்றும் சந்தன மரக்கட்டை வியாபாரி கண்ணாயிரம் ஆகிய ஐந்து பேரை அதியமான்கோட்டை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 கிலோ சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி அருகே வசிக்கும் சேலம் மாவட்ட வன அதிகாரி கௌதம் இல்லத்தில் சந்தன மரம் வெட்டி கடத்திய வழக்கில் திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாட்டை சேர்ந்த மகாலிங்கம்(வயது 27) மற்றும் ஜேஷ்(வயது 28) ஆகிய 2பேர் கைது செய்து அஸ்தம்பட்டி போலீசார் சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
Tags :