600 போதை மாத்திரைகள் பறிமுதல்... 5 பேர் கைது

கோவை மாநகர பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதை தடுக்க சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், பீளமேடு எல்லைத் தோட்டத்தில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த பகுதியில் நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, ஐந்து பேரை கைது செய்தனர். அஜித் குமார், கோகுல், இளவரசன், வினோத்குமார் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர், இளைஞர்களிடம் போதைப்பொருட்கள் விற்பனை செய்துவரும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிந்தது. அவர்களிடமிருந்து 600 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :