கஞ்சா விற்றவா் கைது.1¼ கிலோ கஞ்சா பறிமுதல் வங்கி கணக்கும் முடக்கம்
நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சம்பவத்தன்று தேரூர் அருகே உள்ள கொத்தன்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அந்த பகுதியை சேர்ந்த ரவி என்ற கனகசபாபதி (வயது62) என்பதும், அங்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், அவரது வங்கி கணக்கையும் போலீசார் முடக்கினர்.
Tags :



















