கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் கைது

by Staff / 18-10-2023 12:41:59pm
கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் கைது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள விராலிமேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையில் சிவகுமார் புவனேஷ் மற்றும் கருப்புசாமி ஆகியோர் அடங்கிய போலீஸ் குழுவினர் விராலிமேடு பகுதியில் இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மூன்று பேரை நிறுத்தி வாகன சோதனை ஈடுபட்ட போது சுமார் 3 கிலோ கஞ்சா பதுக்கி விற்பனைக்கு எடுத்து வந்தது தெரிய வந்தது. இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், விராலி மேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சுரேஷ் கவுந்தப்பாடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் காஞ்சிக்கோயில் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பது தெரியவந்தது தெரியவந்தது இவர்கள் மீது ஏற்கனவே கோபிசெட்டிபாளையம் கவுந்தப்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo