+2 மாணவிக்கு கத்திகுத்து வாலிபர் வெறிச்செயல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி வழக்கம் போல் இன்று காலை பள்ளிக்கு சென்றப்போது குன்னூர் ராஜாஜிநகர் பகுதியை சேர்ந்த பூ வியபாரி அப்பாசின் மகன் ஆசிக் வயது 26 என்பவன் பள்ளி மாணவியை பின் தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை மூன்று இடங்களில் கத்தியால் குத்தினான் சம்பவம் அறிந்த பொதுமக்கள் மாணவியை மீட்டு குன்னூர் லாலி அரசு மருத்துவ மனைக்கு கொண்டுவந்தனர் குன்னூர் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது மேல் குன்னூர் காவல் துறை ஆய்வாளர் கவிதா தலைமையில் கத்தியால் குத்திய ஆசிக்கை பிடித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகிறார் இச்சம்பவம் குன்னூரில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :