கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை 

by Editor / 25-02-2025 09:59:17am
கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை 


கோவில்பட்டியில் கை குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்டார்.

கோவில்பட்டியில் வீரவாஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கேரளாவில் தங்கி கூலித் தொழில் செய்து வரும் நிலையில், அவரது மனைவி கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவில் இவரது வீட்டில் புகுந்த 2 பேர், குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து, வீட்டுக்கு வந்த கணவரிடம் தனக்கு நேர்ந்த துயரத்தை அப்பெண் தெரிவித்த பின் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம், மாரியப்பன் ஆகிய இருவர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.ந்தவழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் துபபாக்கியால் சுட்டு பிடித்தனர்.

 

Tags : கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை 

Share via