ஜாபர் சாதிக்கிடம் தீவிரமாகும் விசாரணை.-திக் திக் நிலையில் அவரது தொடர்புகள்.

டெல்லியில் சிக்கிய 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு பாட்டியாலா நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கில் அரசியல் கட்சிகளும், திரைப்படத்துறையை சேர்ந்த பிரபலங்களும், முக்கிய தொழிலதிபர்களுக்கும் தொடர்பு உள்ளது என அவர் வாக்கு மூலம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்து அவர் கூறிய அரசியல் கட்சிகளும், திரைப்படத்துறையை சேர்ந்த பிரபலங்களும், முக்கிய தொழிலதிபர்களை மேற்கொண்டு தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : ஜாபர் சாதிக்கிடம் தீவிரமாகும் விசாரணை.-திக் திக் நிலையில் அவரது தொடர்புகள்.