பெங்களூரில் மோடியின் ஊர்வலம்

by Staff / 07-05-2023 12:41:33pm
பெங்களூரில் மோடியின் ஊர்வலம்

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி பெங்களூரில் இன்று இரண்டாவது நாளாக இறுதிக்கட்ட ஊர்வலத்தை நடத்தி வருகிறார். பிரதமர் மோடியின் இந்த இறுதி கட்ட பேரணி காலை 10 மணிக்கு தொடங்கி 11:30 மணி வரை நடைபெறும். இதனைத் தொடர்ந்து 'மோடி மோடி' என்ற கோஷத்துடன் பிரதமர் மோடி மீது மலர்கள் தூவி மக்கள் வரவேற்கும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது. பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via