ஜார்கண்டில் ரோப் கார் மோதியதில் 2 பெண்கள் பலி

by Staff / 12-04-2022 12:54:19pm
ஜார்கண்டில் ரோப் கார் மோதியதில் 2 பெண்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை திரிகூடமலை குன்றுகளுக்கிடையே 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரோப் கார்கள் திடீரென்று இயந்திரக் கோளாறு காரணமாக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது இந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மீட்பு பணியின்போது ஹெலிகாப்டரில் இருந்து ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். ரோப் காரில் சிக்கியவர்களில் 27 பேரை விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்.

2 நாட்களாக மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். போதிய வெளிச்சம் இன்மை காரணமாக மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டது. 20 பேர் ரோப் காரில் சிக்கி உள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ட்ரோன்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்பு பணி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories