தமிழக முதலமைச்சர் விஜய் இன்று சென்னை மாநிலக் கல்லூரி அரங்கத்தில் 2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

by Admin / 14-07-2026 11:11:02am
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று சென்னை மாநிலக் கல்லூரி அரங்கத்தில் 2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று சென்னை மாநிலக் கல்லூரி அரங்கத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பாக பணி நியமன ஆணைகளை வழங்கினார். பணி நியமனம் பெற்றவர்களில் உதவி மருத்துவர்கள் 751 பேரும் சுகாதார ஆய்வாளர்கள் 1391 பேரும் என மொத்தம் 2,144 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.. அத்துடன் 139.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 35 மருத்துவ கட்டடங்களையும் திறந்து வைத்ததோடு அரசு மருத்துவமனைகளுக்காக நவீன மருத்துவ உபகரணங்களும் அவற்றை பயன்படுத்தும் நடைமுறையும் தொடங்கி வைத்ததோடு பொதுமக்கள் தங்கள் நன்கொடை நிதியை அரசு மருத்துவமனைகளுக்கு எளிதாக வழங்கும் முகமாக  உருவாக்கப்பட்ட நலம் tn இணையசெயலியையும் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தினார்.

 

Tags :

Share via
Logo