உல்லாசத்திற்கு மறுத்த திருநங்கையை கத்தியால் குத்திய டாஸ்மாக் ஊழியர்களுக்கு வலைவீச்சு

கோவை சூலூர், பள்ளாளையம் பகுதியில் வசித்துவருபவர் தர்ஷா இவர் சோனா என்ற திருநங்கையின் பாதுகாப்பில் இருந்து வருகிறார்.தர்ஷா வழக்கமாக திருநங்கைகளுடன் சேர்ந்து போக்குவரத்து சிக்னல்களில் யாசகம் செய்து வருவதை வழக்கமாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல் 7ஆம் தேதி மாலையில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் மற்ற திருநங்கைகளுடன் இணைந்து யாசகம் செய்தஅவர் இரவு 11 மணிக்கு சூலூர், பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு கோவை ஒண்டிபுதூர் மிராஜ் தியேட்டர் அருகே நடந்து சென்றபோது திருநங்கை தர்ஷாவை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் தர்ஷாவை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்,இதனால் ஆத்திரமடைந்த தர்ஷாவை மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், மற்றும், பணத்தை கொள்ளையடிக்க முயன்றதில் அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்த தர்ஷாவை மர்மநபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் திருநங்கை தர்ஷாவின் கை மற்றும் கழுத்தில் ஆழமாக கத்திகுத்து ஏற்பட்டதில் தர்ஷா வலிதாங்காமல் அலரியுள்ளார். இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.
அந்த வழியாக ரோந்துவந்த சிங்காநல்லூர் போலிசார் தர்ஷாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். அதர்க்குள் தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த திருநங்கைகள் தர்ஷாவை தொடர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரனையில் திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்து கத்தியால் குத்தியது கோவை நீலிக்கோனாம்பாளையத்தில் டாஸ்மாக் கடையில் வேலைபார்க்கும் மேகனாதன் மற்றும் பூபாலன் என்பது போலீசாரின் முதல்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களை பிடிக்க போலீ சார் இரண்டு தனிபடை அமைத்து தேடிவருகிறார்கள். உல்லாசத்திற்கு மறுத்த திருநங்கையை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :