கேரளா சுற்றுலா போறீங்களா கவனம்.

கேரளாமாநிலம் திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். முலாங்குன்னத்துகாவு பகுதியில் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்ற பகுதிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க, பண்ணையைச் சுற்றியுள்ள 1 கி.மீ. சுற்றளவு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பன்றி இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.
Tags : கேரளா சுற்றுலா போறீங்களா கவனம்.