அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமாசெய்து விட்டு த.வெ.கவில் இணைவது ஆபத்து-திருமாவளவன்

by Admin / 27-05-2026 01:17:20am
அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமாசெய்து விட்டு த.வெ.கவில் இணைவது ஆபத்து-திருமாவளவன்

இரண்டு நாட்களில் அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இது தமிழக வெற்றிக்கழகத்தின் ஆரோக்கியமான அரசியலுக்கு விரோதமானது என்றும் கட்சியின் நம்பகத் தன்மைக்கு கேடு விளைவிக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார். இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வீரபாண்டியன் காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி ஆகியோர் இந்த குதிரை பேர அரசியல் பெரியதொரு தீங்கை விளைவிக்கும் என்றும் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தமிழக வெற்றி கழகத்தில் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு வரும் அதிமுகவினரை த.வெ.க சேர்ப்பது கட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என்றும் அதனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வரும் அதிமுகவினரை சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் இது மறைமுகமாக பாஜக  இணைகிறது என்று  கொள்ள வேண்டும். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் நீடிப்போம் என்கிற நம்பிக்கையில் செயல்பட வேண்டுமே தவிர இதுபோன்ற விமர்சனங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்

எஸ் பி வேலுமணி சி.வி சண்முகம் ஆகியோரின் ஆதரவு வட்டாரத்தில் இருந்து மரகதம் குமரவேல் பி சத்தியபாமா எஸ் சிவகுமார் இசக்கி சுப்பையா உள்ளிட்ட நாலு முக்கிய எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை சபாநாயகர் இடம் ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளனர் அமைச்சர் பதவி மற்றும் அதிகார பகிர்வு என்ற வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே இந்த எம்எல்ஏக்கள் கட்சி மாறுகிறார்கள் என்ற அதிமுக தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் நீண்டு ஒலிக்கின்றன.

 

Tags :

Share via
Logo