திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்துவதற்கு அனுமதி

தமிழ்நாடு அரசால் மது விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனத்தை மாநில நுகர்வோர் வாணிபக் கழகம் நடத்தி வருகின்றது. தமிழக முழுவதும் 5000 திற்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை நடத்தி வரும் இந்நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது .தமிழ்நாடு அரசினுடைய வருவாயில் டாஸ்மாக் விற்பனை என்பது குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது .கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மது விற்பனையின் மூலமாக அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது என ஆயத் தீர்வைத் துறை தகவல் தெரிவித்துள்ளது .இதனால் கடந்த ஆண்டின் உடைய மது விற்பனையினுடைய அளவு பல மடங்காக உயர்ந்து உள்ள நிலையில், மேலும் டாஸ்மாக் வழியாக அதிக வருவாயை ஈட்ட வேண்டும் என்ற இலக்கோடு தமிழக அரசு தற்பொழுது திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்துவதற்கு அனுமதி அளித்துள்ளது இதன் மூலம் மது அருந்துவதற்கான பார்களை நடத்துகிற உரிமை பெற ஓராண்டிற்கு ஒரு லட்ச ரூபாய் கட்டணமாகும் . மாநகராட்சி எல்லை உட்பட்ட பகுதிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . நகராட்சி உட்பட்ட பகுதிகளில் ஆண்டிற்கு 75 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .மது விருந்து ஒரு நாளுக்கு நடத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. . அதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 11 ஆயிரம் ரூபாயும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக அரசுக்கு ஆண்டுக்கு50.000கோடிக்கு மேல் வருவாயை ஈட்ட இலக்கு.

Tags :