மதுரை ஆவின் நிறுவனத்தில்  13.78 கோடி மோசடி:  மேலாளர் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்

by Editor / 11-05-2021 05:20:14pm
மதுரை ஆவின் நிறுவனத்தில்  13.78 கோடி மோசடி:  மேலாளர் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்

 

மதுரை ஆவின் நிறுவனத்தில் 13.78 கோடி மோசடி நடைபெற்றது தொடர்பாக, ஆவின் மேலாளர் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். பால் உபபொருட்களை வெளிசந்தையில் விற்று முறைகேடு செய்ததாக, மேலாளர் மணிகண்டன், உதவி பொது மேலாளர் கிருஷ்ணன் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்து வருவதாக, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இது தொடர்பாக சென்னை ஆவின் துணை பதிவாளர் அலெக்ஸ் தலைமையில் அதிகாரிகள் கடந்த 10 நாட்களாக விசாரணை நடத்தினர். இதில், பால் உபபொருட்கள் விற்பனையில் கிட்டதட்ட 13.71 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.இதையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக, ஆவின் உதவி மேலாளராக பணிபுரிந்த கிருஷ்ணன், சேகர், மேலாளர் மணிகண்டன் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via

More stories