கார்கிலில் ராணுவ வீரர்களோடு தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி

by Editor / 24-10-2022 09:13:06pm
கார்கிலில் ராணுவ வீரர்களோடு தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி

ஆண்டுத்தோறும் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி அன்று எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தார்.இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளிபண்டிகையை  கொண்டாடினார். அப்போது, வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி பிரதமர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன் பின்னர் மோடியுடன் வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் உடனான அனைத்து யுத்தங்களிலும் வெற்றி கொடி நாட்டப்பட்டு உள்ளதாகவும், தீபாவளி என்றால் பயங்கரவாதத்தின் முடிவு என்றும் கார்கில் அதை சாத்தியப்படுத்தியது என்றும் நீங்கள் அனைவரும், நமது எல்லைக் காவலர்கள் நாட்டின் பாதுகாப்பின் வலுவான தூண்கள். நீங்கள் என்றார்.பின்னர் ராணுவ வீரர்கள் இந்திய சுதந்திர தின பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கார்கிலில் ராணுவ வீரர்களோடு தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி
 

Tags :

Share via

More stories