தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

by Editor / 22-09-2022 11:25:13am
தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக  3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

22.09.2022 மற்றும் 23.09.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via