மின்சாரம் தாக்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு

by Staff / 20-11-2023 11:29:31am
மின்சாரம் தாக்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். உன்னாவ் அருகே உள்ள ஒரு கிராமத்தில், சிறுவர்கள் தவறுதலாக ஒரு வீட்டில் மின்விசிறியின் மின் கம்பிகளை தொட்டனர். மின்சாரம் தாக்கியதில் நான்கு சிறுவர்களும் உயிரிழந்தனர். விவசாய நிலத்தில் இருந்து வீட்டிற்கு வந்த பெற்றோர், குழந்தைகளின் உடல்கள் தீக்காயங்களுடன் கருகிய நிலையில் கிடந்ததைக் கண்டு கதறி அழுதனர். உயிரிழந்தவர்கள் மயங்க் (9), ஹிமாங்க் (6), ஹிமான்ஷி (8) மற்றும் மான்சி (5) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த கோர சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

 

Tags :

Share via

More stories