செங்கோலுடன் மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணைஏறினாா்.

by Admin / 06-05-2023 11:23:22pm
 செங்கோலுடன் மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணைஏறினாா்.

இங்கிலாந்தின் மகா ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு மரணமடைந்ததை தொடர்ந்து இங்கிலாந்தின் புதிய மன்னர் பொறுப்பை மூன்றாம் சார்லசுக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது .மூன்றாம் சார்லஸ் மன்னரின் அதிகாரப்பூர்வமான முடிசூட்டு விழா வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசர் பாரம்பரிய மரபு படி செங்கோல் ,தடியுடன் மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்த்தபட்டாா்.. இவரை தொடர்ந்து இங்கிலாந்து ராணியாக கமலா பார்க்கர் முறைப்படி அரசியானார்.

அரசராக பொறுப்பேற்ற மூன்றாம் சார்லஸ்க்கு அரசு செங்கோலையும் வெள்ளை நிற வாத்து ஒன்றும் அளிக்கப்பட்டு, அரசரின் தலையில் ஆர்ச் பிசப் கிரீடத்தை சூட்டினார். மூன்றாம் சார்லஸ் முடி சூட்டுக்கு பின்னர் அரியணையில் அமர்ந்தார்.. அரசியானகமலா பார்க்கருவுக்கும்  முறைப்படியான சடங்குகள் நிகழ்த்தப் பெற்று அவருக்கும் கிரீடம் சூட்டப்பட்டது.அரசராக பொறுப்பேற்றுக் கொண்ட மூன்றாம் சார்லஸ் பொதுத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கட்சியின் தலைவரை பக்கிங்காம் அரண்மனைக்கு அழைத்து முறையாக அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பை விடுப்பதோடு அரசை மேற்பார்வை செய்வதற்கும் அரசை கலைப்பதற்கு ஆன அதிகாரத்தை கொண்டவராக திகழ்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எந்தச் சட்டம் நிறைவேறுவதற்கும் அரசரின் ஒப்புதல் அவசியம் தேவை .மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தினுடைய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர் 56 நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பினுடைய தலைவராகவும் ஆகிறார் .அத்துடன் பிரிட்டன் கீழ் உள்ள 14 நாடுகளுக்கும் அவர் அரசராகவே நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 செங்கோலுடன் மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணைஏறினாா்.
 

Tags :

Share via