காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை- காவல்துறை ஐவரை கைது செய்து விசாரணை.

by Admin / 25-02-2024 12:21:49pm
 காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை- காவல்துறை ஐவரை கைது செய்து விசாரணை.

 சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு  பிரவீன் என்கிற இளைஞர் வேற்று ஜாதியைச் சேர்ந்த ஷர்மிலி என்கிற பெண்ணை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து உள்ளார்.. இது குறித்து அறிந்த பெண்ணினுடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், பெண்ணின்அண்ணன் தினேஷ்  தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து பள்ளிக்கரணையில் உள்ள ஜாலி பாய் பார் முன்பாக மது அருந்த வந்த பிரவீனை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தலை மறைவாயினர். ஜாதி மாறி திருமணம் செய்த வாலிபர் படுகொலையை அடுத்து காவல்துறை மூன்று தனிப்படை அமைத்து கொலை செய்தவர்களை தேடி வந்த நிலையில், ஷர்மிலியின் அண்ணன் உள்பட ஐவரை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

 

 

Tags :

Share via

More stories

Logo