தமிழ்நாட்டில் நடப்பது அதிகாரத் திமிர் பிடித்த பாசிச ஆட்சி.. விஜய் காட்டம்

by Editor / 27-05-2025 01:48:03pm
தமிழ்நாட்டில் நடப்பது அதிகாரத் திமிர் பிடித்த பாசிச ஆட்சி.. விஜய் காட்டம்

தவெக தலைவர் விஜய் பதிவில், “சென்னை, வியாசர்பாடியில் ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெகவினர் உதவியபோது அவர்களிடம் போலீசார் அவர்களை மிரட்டியுள்ளனர். உதவும் பெண்களை பூட்ஸ் காலால் எட்டி உதைத்து ஆடையைக் கிழித்து அராஜகமாக நடத்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளாரா? தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிசி ஆட்சி என்பதற்கு இதுவே சாட்சி” என்றார்.
 

 

Tags :

Share via