டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

by Staff / 08-04-2024 05:42:04pm
 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஏப்ரல் 17,18,19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

 

Tags :

Share via

More stories