2. 250 கோடி மதிப்பில் கூடுதல் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு

by Staff / 02-04-2022 01:42:19pm
 2. 250 கோடி மதிப்பில் கூடுதல் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு

உக்ரைனுக்கு மேலும் 2,250 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை சமாளித்து பதில் தாக்குதல் நடத்தவும் உக்ரேனின் பாதுகாப்புத் திறனை வெளிப்படுத்தவும் ராணுவ உபகரணங்களை வழங்க உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளார்.

 ராணுவ தொகுப்பில் லேசர் ராக்கெட் ட்ரோன்கள் இருளில் குறிபார்த்து தாக்கும் உதவும் கருவிகள் தொலைத்தொடர்பு கருவிகள் மருத்துவ உபகரணங்கள் தோட்டாக்கள் வெடிமருந்துகள் தளவாட உதிரிபாகங்கள் உள்ளிட்டவைகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 106 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியதாக  பென்டகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via