ஆஸி., கிரிக்கெட் வீரரின் 4 மாத குழந்தை பலி

by Staff / 25-10-2023 03:54:21pm
ஆஸி., கிரிக்கெட் வீரரின் 4 மாத குழந்தை பலி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஃபவாத் அகமது வீட்டில் பெரும் சோகம் நடந்துள்ளது. ஃபவாத்தின் நான்கு மாத மகன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பிறந்ததில் இருந்தே குழந்தை கடுமையான உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளது. மெல்போர்னில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இதுபோன்ற வலியை யாரும் தாங்கக் கூடாது என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று ஃபவாத் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். ரசிகர்களும், சக கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via