குழந்தைகளை மகிழ்விக்க வருகிறது எடெர்னல்ஸ் படம் !

by Editor / 18-10-2021 05:30:29pm
குழந்தைகளை மகிழ்விக்க வருகிறது எடெர்னல்ஸ்  படம் !

 

உலகம் முழுவதும் மார்வெல் திரைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குழந்தைகளை மட்டுமல்லாது பெரியவர்களையும் கவரும் வகையில் கற்பனை கதாபாத்திரங்களையும் அதற்கேற்ற மாதிரியான திரைக்கதைகளையும் மார்வெல் நிறுவனம் தயாரித்து அசத்தி வருகிறது.

அந்த வகையில் அட்வெஞ்சர் மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள Eternals படத்தின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது மார்வெல் இந்தியா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட முக்கியமான தேசிய மொழிகளின் ட்ரைலரையும் மார்வெல் வெளியிட்டுள்ளது. மார்வெல்லின் வழக்கமான பாணியில் காமிக்ஸ் நாவலை தழுவிதான் எடுக்கப்பட்டுள்ளது. தினா, இக்ரிஸ், பிளாக் நைட் , செர்ஸி உள்ளிட்ட கதாபாத்திரங்களை சுற்றிதான் திரைப்படம் நகரவுள்ளது.
தினா கதாபாத்திரத்தில் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்ட ஏஞ்சலினா ஜோலி நடித்துள்ளார்.இந்த திரைப்படம் 200 மில்லியன் பட்ஜெட்டின் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை Chloé Zhao இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.


இந்த படத்தில் Sam Raimi, Elizabeth Olsen. Wanda Maximoff, Benedict Cumberbatch உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் Benedict Cumberbatch டாக்டர் ஸ்ட்ரேன்ஜாக நடித்துள்ளார். அவர் நிகழ்த்தும் சாகசங்களின் தொகுப்புதான் படம் . இது முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. மார்வெல் படத்தை தயாரிக்க Sam Raimi இப்படத்தை இயக்கியுள்ளார் . படம் அடுத்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி இந்தியாவில் வெளியாவுள்ளது..


Chris Hemsworth அசத்தியிருந்த Thor படத்தின் முந்தைய பாகங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது , அந்த வகையில் முதல் பாகங்களின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது Thor: Love and Thunder. அட்வன்ஜர் மற்றும் ஃபேண்டஸி கதைக்களம் கொண்ட இந்த படத்தை இயக்கியுள்ளார் Taika Waititi. படம் அடுத்த ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மறைந்த இளம் நடிகர் Chadwick Boseman நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம்தான் .Black Panther. அந்த படத்தின் தொடர்ச்சியாகத்தான் Black Panther: Wakanda Forever திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. Tenoch Huerta , Letitia Wright ,Daniel Kaluuya உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாகசங்கள் நிறைந்த சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ள இந்த படத்தை Ryan Coogler இயக்கியுள்ளார். படம் அடுத்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


1998 ஆம் ஆண்டு முதன் முறையாக Blade படம் வெளியானது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் வெளியாகின. மொத்தம் மூன்று பாகமாக வெளியான Blade படத்தில் Wesley Snipes ஹீரோவாக நடித்திருந்தார். ஆக்‌ஷன் ஹாரர் கதைக்களத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. Blade மார்வெல் காமிக்ஸில் இடம்பெற்ற ஒரு கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தற்போது ரீபூட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது , புதிய படத்தில் Mahershala Ali கதாநாயகனான Blade படத்தின் நடித்துள்ளார்.படம் அடுத்த மாதம் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


Nia DaCosta என்ற பெண் இயக்குநர் படைப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் The Marvels. இந்த படம் மார்வெல் தயாரிப்பில் வெளியான சூப்பர் ஹீரோக்களை வைத்து உருவாக்கியுள்ளனர். இந்த படம் மூலம் பலரின் ஃபேவெரைட் சூப்பர் ஹீரோக்களை ஒன்றாக திரையில் காண முடியும். Captain Marvel,Ms. Marvel மற்றும் Monica Rambeau. உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இப்படத்தில் இடம்பெறும் என தெரிகிறது.படம் அடுத்த வருடம் நவம்பர் 22 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான மார்வெல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via