கடைகளில் சாக்லேட் தின்றுவிட்டு மலம் கழித்து சென்ற திருடன்

by Staff / 01-03-2023 02:02:33pm
கடைகளில் சாக்லேட் தின்றுவிட்டு மலம் கழித்து சென்ற திருடன்

திருப்பூர்: கேவிஆர் நகர் பகுதியில் திருமலை காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இதில் மளிகை கடை, துணிக்கடைகள் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு ஐந்து கடைகளில் பூட்டை உடைத்து மர்மநபர் பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். இதில் மளிகை கடையில் திருடும்பொழுது அங்கிருந்த சாக்லேட்டுகளை சாப்பிட்டுவிட்டு கடைக்கு வெளியே மலம் கழித்துவிட்டு சென்றுள்ளார். காலையில் கடை உரிமையாளர்கள் வந்து பார்த்தபொழுது கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கொள்ளை போனது தெரியவந்தது. உரிமையாளர்களின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையன் குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories