மருத்துவரின் சிகிச்சைக்காக ஒரே நாளிலில் ₹20 லட்சம் நிதி  கிராம மக்கள் அசத்தலால் நெகிழ்ச்சி 

by Editor / 24-07-2021 07:54:38pm
மருத்துவரின் சிகிச்சைக்காக ஒரே நாளிலில் ₹20 லட்சம் நிதி  கிராம மக்கள் அசத்தலால் நெகிழ்ச்சி 

 


ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் ராவ் என்பவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. அதே பகுதியில் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் இரவு பகல் பாராமல் மக்களுக்காக பணிபுரிந்து வருகின்றனர்.

24ஆம் தேதி அவருக்கு கொரோனா உறுதியானது. இதன் பின்பு அவரை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்தபோது நுரையீரல் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு இரண்டு கோடி ரூபாய் செலவாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இதில் அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் ராவின் மனைவி பாக்கியலட்சுமி தனது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர்களிடம் முடிந்த அளவு பணத்தை திரட்டினார். இருப்பினும் அவரால் பணத்தை திரட்ட முடியவில்லை. இதை அறிந்த கரஞ்சேடு கிராம மக்கள், மருத்துவர் பாஸ்கர் ராவ்க்கு நிதி திரட்ட முடிவு செய்தனர். இதனால் பலர் தங்களின் அவசிய செலவுக்காக சேமிப்பில் இருந்த பணத்தை கூட அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக கொடுக்க முன்வந்தனர்.


அதன்படி 20 லட்சம் வரை மக்கள் பணத்தை திரட்டினார். அவற்றை மருத்துவர் பாக்கியலட்சுமி இடம் கொடுத்து இதை வைத்து மருத்துவ செலவை செய்யும்படி கூறியுள்ளனர். இது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதை அறிந்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மருத்துவ சிகிச்சைக்காக மொத்த செலவை அரசே ஏற்கும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து பாஸ்கருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via